ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தமைக்கு சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று (06) நாடாளுமன்றில் கருத்துரைத்த போதே திலித் ஜயவீர தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது, "இன்று ஞானசார தேரர் பற்றிப் பேசுகையில், நான் அவருடைய வழிமுறைகளை அங்கீகரித்த ஒருவன் அல்லன். ஆனால், அவர் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
விமர்சித்த மகா சங்கத்தினர்
நாம் மதிக்கும் நீதிமன்றத் தீர்ப்பில் அவரைச் சிறையிலடைக்குமாறு கூறப்படவில்லை. அவருக்கு மீண்டும் மன்னிப்பு வழங்கக்கூடிய வழியே அந்த தீர்ப்பின் மூலம் வெளிப்படுகிறது.

நான் கேட்டுக்கொள்வது, அவருடைய காவி உடையைக் களைந்து, சாதாரண உடைகளை உடுத்தி, காட்சிப்படுத்தி யாரை மகிழ்விக்க முற்படுகிறார்கள்.
இந்நாட்டில் அவருடைய செயற்பாடுகளை விமர்சித்த மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத்தினர்கூட இதனால் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நாட்டை இவ்வாறு பதற்றமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்ல எந்தவொரு அரசாங்கத்தாலும் முடியாது“ என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |