மீண்டும் நீதிமன்றில் முன்னிலையான ஞானசார தேரர்!
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (07) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதற்கமைய ஞானசார தேரர் கைதிகளுக்கான ஆடையணிந்த நிலையில் சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மதமொன்றை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 09 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |