மஞ்சள் சிலிண்டர்களை நிறம் மாற்றி லிட்ரோ என ஏமாற்றிய கும்பல் கைது
லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர்கள் போல தோற்றமளிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட மஞ்சள் நிற சிலிண்டர்களுடன் மோசடியில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மஞ்சள் நிற வெற்று எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறத்திலான வர்ணப்பூச்சு பூசப்பட்டு இவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 3 சந்தேகநபர்களையும் கொடதெனியாவ காவல்துறையினர் கைதுசெய்து, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
விளக்கமறியல் உத்தரவு
இதன்படி கைதுசெய்யப்பட்டவர்கள் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

வர்ணப்பூச்சு பூசப்பட்ட சிலிண்டர்கள் புதியதாக தெரிவதனால் அவற்றை ஏற்கனவே பயன்படுத்தியது போல காட்டுவதற்காக உணவுத்துகள்கள் ஒட்டியிருந்த வண்ணம் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொடதெனியாவ காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |