மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) உத்தியோகபூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (21) இரவு இவ்வாறு சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அந்த திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, இந்த சைபர் தாக்குதலானது, நாளை (23) முதல் நாரஹேன்பிட்டியில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் முன்பதிவு சார்ந்த சேவைகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்பதிவு செய்தல்
அத்துடன் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னதாகவே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சைபர் தாக்குதலினால் குறித்த இணையக் கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், https://dmtappointments.dmt.gov.lk/ ஊடாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |