சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்
புதிய இணைப்பு
முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சிரிலிய சவிய கணக்கில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலபோனிலுள்ள அவரது வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்றிருந்தனர்.
இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரிலிய சவிய கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |