ஈபிடிபி கொலைகள் அம்பலம் : உண்மைகளை உடைத்த அரியநேத்திரன்
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏறாவூர் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுரேஸ்குமார் என்ற நபர் ஒருவரை கடத்தி காணமலாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஈபிடிபி அமைப்பினுடைய முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் தான் இந்த சம்பவத்திற்கு யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு ஒட்டுக்குழுத் தலைவர் தலைமை தாங்கியிருக்கின்றார் என்ற செய்தி வெளியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
ஆயுத ஒட்டுக்குழுக்கள் என்ற அடிப்படையில் கருணா குழு, பிள்ளையான் குழு ஆகியவையே கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பான பெரும்பாலான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவை என்று ஊகிக்கப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 2008ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு தற்போது கிடைத்த இந்த தீர்ப்பு எதிர்பார்க்காத ஒன்றாகும். இதனூடாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதுடன் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் ஆயுத ஒட்டுக்குழுக்கள் மூலமாக இடம்பெற்ற கடத்தல்கள் காணாமல் ஆக்கப்படல் சம்பவங்களுக்கு இனிவரும் காலங்களில் வழங்கப்படக்கூடிய தண்டனைகளுக்கு இந்த தீர்ப்பு முதற்படியாக அமைந்துள்ளது.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |