கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு
By Bavan
மாவீரர் வாரத்தை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (21) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் சுடர் ஏற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சழுக செயற்பாட்டாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன் போது மகிழடித்தீவு சந்தியில் இருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் நடைபவணியாக அழைத்துவரப்பட்டு பொது சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி சுடர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி