மட்டக்களப்பை காணாமல்போன முன்னாள் பேராளியின் மகள்! முறையான விசாரணை இன்மை தொடர்பில் குற்றச்சாட்டு
காணாமல்போன தனது மகள் குறித்து முறைப்பாடு வழங்கியும் காவல்துறை முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடு
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி காலை சுமார் 09.00 மணியளவில், அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு தனது மகளை அழைத்து சென்றிருந்தேன்.

பிற்பகல் 1 மணிக்கு வகுப்பு முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து, அன்றைய தினம் பிற்பகல் 04 மணியளவில் காத்தான்குடி காவல் நிலையத்திற்குச் சென்றபோது, மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மட்டக்களப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து சி.சி.ரி.வி காணொளிகளைப் பரிசீலித்ததாகவும் கூறினர்.
எனினும், குறிப்பிட்ட வீதியைத் தாண்டிச் செல்வது வரை மட்டுமே கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது. அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் தெரியவில்லை.
மேலும், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். அங்கிருந்து காவல்துறை மா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும், விசாரணையில் எதிர்பார்த்த வேகம் காணப்படாததாலேயே ஊடகங்கள் வாயிலாக இவ்விடயத்தை வெளிப்படுத்த முன்வந்துள்ளோம்
தமது மகள் வற்புறுத்தலின் பேரில் எங்காவது கடத்தி வைக்கப்பட்டிருக்கலாம். மற்றைய பகுதிகளிலும் இளம்பெண்கள் காணாமல் போகும் சம்பவங்கள் பதிவாகி வருவதால் குடும்பத்தினர் பெரும் அச்சத்தில் உள்ளளோம்.
எனவே காவல்துறை இவ்விவகாரத்தைத் தீவிரமாக ஆராய்ந்து தனது மகளை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் உருக்கமாகக் கோரிக்கையை விடுக்கின்றேன்.” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |