கொழும்பு ப்ளூமெண்டல் பகுதியில் டீசல் கசிவு
கொழும்பு - புளூமெண்டல் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு முனையத்தில் இருந்து டீசல் எரிபொருள் கசிவு சம்பவம் பதிவாகியுள்ளது.
சேமிப்பு வளாகத்தில் இருந்து நேற்று(21.11.2026) கசிந்த டீசல், அவ்விடத்தின் வடிகால் அமைப்பு வழியாக பிரதான வீதியை நோக்கி கசிந்தோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சுற்றியுள்ள பகுதியில் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருளைச் சேகரிப்பு
இந்நிலையில் குறித்த பகுதியை சேர்ந்த பிரதேச மக்கள் எரிபொருளைச் சேகரிப்பதில் மும்முரமாக இருந்ததோடு, நச்சுத்தன்மை வாய்ந்த குறித்த எரிபொருள் புகையைச் சுவாசித்தமை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகர்ப்புறப் பகுதியில், வடிகால் அமைப்பின் வழியாக எரிபொருள் பாய்வது மிகவும் அபாயகரமான தீ விபத்தை உருவாக்கும் வலுவான போக்கு இருப்பதாகப் பாதுகாப்புப் தரப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறு கசிந்த டீசலைச் சேகரிப்பதற்காக மக்கள் வடிகாலுக்கு அருகில் கூடுவதாலும், இது ஏற்படுத்தும் கடுமையான தீ அபாயத்தாலும், ப்ளூமெண்டால் பகுதியில் நிலைமை மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |