களையப்பட்ட ஞானசார தேரரின் காவி ஆடை - சரத் வீரசேகர சீற்றம்: கொழும்பில் வெடிக்கும் போராட்டம்
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பாக பௌத்தர் என்ற ரீதியில் வருத்தமடைவதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதற்கு எதிராக அமைதி வழிப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் இன்று (07) காலை 9.00 மணிக்கு கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் என நிதியகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நம் அனைவருக்கும் நாடு, இனம், மதம் மற்றும் கலாசாரம் என அனைத்தும் உள்ளன. நாங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், நமது கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி ஆடையைக் களைந்து, பகிரங்கமாகக் கொண்டு வரப்பட்டமை அனைவரின் மனதையும் அதிர்ச்சியடையச் செய்த ஒரு விஷயமாகும்.
இவ்வாறானதொரு முன்னுதாரணம் நாட்டில் எவருக்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது இளைஞர்களாகிய நம் அனைவரினதும் பொறுப்பாகும் என நிதியகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |