அதிபர் ரணில் வெளியிட்ட மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி
Wickremesinghe Ranil
Sri Lanka Government Gazette
By Mohankumar
உணவுப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் உள்ளிட்ட 300 ற்கும் மேற்பட்ட பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானியை அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.
2023 ஜூன் மாதம் 09ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இதேவேளை, கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் 1,216 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள பொருட்கள் HS 286 பிரிவின் கீழ் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்