மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்காவால் களமிறக்கப்பட்ட சந்திரிக்கா
சிங்கள மக்களினால் துட்டகைமுனுவின் மறு உருவமாக பார்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஆட்சியை அமெரிக்கா (United States) ஆறு வருடத்தில் களைத்ததாக அரசியல் ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முதலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே (Ranil Wickremesinghe) மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக களமிறக்க அமெரிக்க முடிவெடுத்திருந்தது.
இருப்பினும், முன்னெடுக்கப்பட்ட கலந்தாலோசனைகளின் அடிப்படையில், ரணில் விக்ரமசிங்கவினால் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாது என்ற நிலையில் சந்திரிகா குமாரதுங்க (Chandrika Kumaratunga) களமிறக்கப்பட்டு அங்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளை முறியடித்தேன் என மகிந்த ராஜபக்ச முழங்கிய போது அவரை துட்டகைமுனுவின் மறு பிறப்பாக சிங்கள மக்கள் கொண்டாடினர்.
இந்தநிலையில், அவ்வாறு கொண்டாடப்பட்ட மகிந்த ராஜபக்சவின் ஆட்சி வெரும் ஆறு வருடத்தில் களைக்கப்பட்டு அவர் புறந்தள்ளப்பட்டார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த கால மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசியல் நகர்வுகள், சர்வதேச அரசியல் மற்றும் இனி வரும் நாட்களில் இடம்பெறவுள்ள முக்கிய அரசியல்சார் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவதன கருத்துக்களுடன் வருகின்றது லங்காசியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
