இலங்கைக்கான இந்திய தூதுவரை தேடிச் சென்று சந்தித்த நாமல்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) இன்று (16) பிற்பகல் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை (Santosh Jha)சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாக உயர் ஸ்தானிகர் ஜா கூறினார்.
இந்தியாவுடனான நீண்டகால நட்புறவு
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவுடனான நீண்டகால நட்புறவையும் வலுவான இருதரப்பு உறவுகளையும் பெரமுனபெரிதும் மதிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கூறினார்.
High Commissioner @santjha met Hon. MP @RajapaksaNamal at India House this afternoon. Discussed developments in India, Sri Lanka and the wide-ranging bilateral partnership.@MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/9wEdt0lLdr
— India in Sri Lanka (@IndiainSL) September 15, 2025
இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
