வியட்நாமில் உள்ள இலங்கை அகதிகள் எடுத்த திடீர் முடிவு - மீண்டும் நாடு திரும்ப இணக்கம்
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில், படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் கனடா செல்ல முற்பட்ட 303 பேர் கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அங்கு கொண்டு செல்லப்பட்ட 303 இலங்கை அகதிகளும் தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், தம்மை காப்பாற்றி குடியேற்ற நாடொன்று தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை, வியட்நாம் முகாமில் தங்க வைக்கப்பட்ட 303 அகதிகளில் சேர்ந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
302 பேரில் 152
இந்த நிலையில், மீதமுள்ள 302 பேரில் 152 மீண்டும் இலங்கை திரும்புவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Pursuant to an official request by the government of Sri Lanka, IOM assisted 302 stranded Sri Lankan migrants in Vietnam. Necesary arrangements have been made at present to repatriate 152 migrants who are willing to voluntarily return to Sri Lanka.
— M U M Ali Sabry (@alisabrypc) December 23, 2022
Thank you IOM for the support.
மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் அலி சப்ரி நன்றிகளையும் கூறியுள்ளார்.