தென் மாகாணத்தில் 32 நிரந்தர வீதித் தடைகள்
குற்றச் செயல்களைச் செய்துவிட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தென் மாகாணத்தில் நிரந்தரமாக 32 வீதித் தடைகள் நிறுவப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, காலி மற்றும் எல்பிட்டிய காவல்துறை பிரிவுகளில் அதிகளவான வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் காவல்துறை மா அதிபர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் சஞ்சீவ மெதவத்த அறியத்தருகையில்,
யுக்திய செயற்பாடு
“இந்த வீதித் தடைகள் அமைக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்களாகியுள்ளன.
இதன் காரணமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பிச் செல்பவர்களும் குற்றவாளிகளும் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.” என்றார்.
அத்துடன், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் சஞ்சீவ மெதவத்த தலைமையில் தென் மாகாணத்தில் யுக்திய செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |