இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பிரஜைக்கு நேர்ந்த கதி - மனைவி, பிள்ளை நிர்க்கதி
Sri Lanka Tourism
Sri Lanka Police Investigation
Russian Federation
Death
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா வந்த 37 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் எல்ல பிரதேசத்தில் உள்ள ‘புஞ்சி சிறிபாத’ சுற்றுலா தலத்திற்கு சென்று திரும்பிய போது சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது மனைவி,குழந்தை மற்றும் மற்றுமொரு ரஷ்ய தம்பதியுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் பதுளை மாவட்ட வைத்தியசாலையில்
முச்சக்கரவண்டியில் பயணித்த அவர் சுகயீனமடைந்துள்ளதாகவும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ரஷ்ய நபரின் சடலம் பதுளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எல்ல சுற்றுலா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி