கொழும்பில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் : மூடப்பட்ட லோட்டஸ் வீதி
புதிய இணைப்பு
வங்கி ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
அரச வங்கி ஊழியர்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வங்கி கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
அரச வங்கிகளை தனியார்மயப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, கொழும்பு - லேக் ஹவுஸ் சுற்றுவட்டாரத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சாரசபையின் தொழிற்சங்க சம்மேளனம்
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல், தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக மின்சாரசபையின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தங்களின் பிரச்சினைகளுக்கு, அரசாங்கம் இதுவரையில் உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கவில்லை என, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேவிக்கிரம ஆகியோர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
