முஸ்லிம் மக்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் காலம் தொட்டு முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பிலான தெளிவான எண்ணங்களை தமிழர்கள் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ( S. Shritharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில், “முஸ்லிம்கள் சார்பில் மிகப்பெரிய விடயங்களை செய்வதற்கு தமிழ் மக்கள் விட்டுகொடுப்புக்களை செய்துள்ளனர்.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, ஒரு நிகழ்வில் சில விடயங்களை தெரிவித்திருந்தார்.
அதில் குறிப்பாக அம்பாறையில் உள்ள இந்துக்கோவிலை உடைத்ததாகவும், ஆயுதங்களை வாங்கி ஊர்காவற்படைக்கு வழங்கினேன் எனவும், ஜிகாத் என்ற அமைப்பை உருவாக்கினேன் என்றெல்லாம் வெளிப்படையாக பேசியிருந்தார்.
அப்படி இருந்தும் முஸ்லீம் சகோதரர்கள் மீது எவ்வித கோபங்களும் கொண்டிருக்கவில்லை.
தமிழீழ விடுதலை போராட்டத்தின் காலத்தில் இரண்டு பக்கத்திலும் நிறைய வலிகள் உண்டு மற்றும் காயம் உண்டு அத்தோடு, முஸ்லிம் சகோதரர்களும் போராளிகளாள இணைந்து வீர மரணம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் தற்போது வரையிலும் சில முஸ்லிம் சகோதரர்கள், விரோதமான மற்றும் குரோதமான கருத்துக்களை தெரிவிப்பது மன வருத்தத்தை அளிக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முஸ்லிம் உறவுகள் குறித்தும், தமிழ் மக்களுக்கும் அவர்களுக்குமான உறவுகள் குறித்தும் மற்றும் நடைமுறை அரசியல் குறித்தும் அவர் பலதரப்பட்ட கருத்துக்கள் தெரிவித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
