உகண்டாவில் திரைப்பட பாணியில் 38 கொலைகள்: 15 ஆண்டுகளாக மனித உடல்களை உண்ட சீரியல் கில்லர் கைது
கிழக்க ஆபிரிக்க நாடான உகண்டாவில் 15 ஆண்டுகளில் 38 பேரை கொலை செய்து அவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்ட நபரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முஜுரிசி மோசஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான நீண்ட காலகட்டத்தில், மசாகா, இபண்டா மற்றும் காசோ ஆகிய பல்வேறு பகுதிகளில் இந்தக் கொலைக் குற்றங்களை செய்துள்ளார்.
பெண்களை ஏமாற்றியும், ஆசை வார்த்தைகளைக் கூறி வரவழைத்தும் கொடூரமாகக் கொலை செய்து வந்துள்ளார்.
அதிபயங்கர செயல்
இந்தக் கொலையாளி கொலை செய்தவர்களின் உடல்களை அங்கேயே விட்டுச் செல்லாமல், சமைத்துச் சாப்பிட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மனித இறைச்சியை உண்ணும் இந்த அதிபயங்கரமான செயல் உகாண்டா மக்களிடையே கடும் பீதியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காணாமல் போனோர் வழக்குகள் மற்றும் கொலைச் சம்பவங்களுக்கும் இந்த நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் புலனாய்வாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உகண்டா வரலாற்றிலேயே மிகவும் மோசமான சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது இல்லத்திலிருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நபர் மீது பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு, பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இஸ்ரேல் தேர்தல்: நெசெட் நாடாளுமன்றத்தின் பின்னணி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |