குட்டிமணி, தங்கதுரையின் 39ஆவது நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி உள்ளிட்ட 53பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் புரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை

இந்த நிகழ்வில் கட்சியின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் செ.மயூரன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

