வடக்கில் சீரற்ற காலநிலை: பெருமளவு நெற்செய்கை நிலங்கள் நாசம்
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பல ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை உருவாக்கியுள்ள விளைவுகள் குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நெற்செய்கை நிலங்கள்
வடக்கில் பல ஏக்கர் நெற்செய்கை நிலங்கள் பெய்து வரும் கன மழை காரணமாக அழிவடைந்துள்ளது.
விவசாயத்தினை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குற்பட்ட 07.04 ஏக்கரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 3.325 ஏக்கரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 18.75 ஏக்கரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 17 ஏக்கர் நெற்செய்கையும் நாசமாகியுள்ளன.
மரக்கறி செய்கையும் அழிவடைந்துள்ளது
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் 9.125 ஏக்கர் மரக்கறி செய்கையும் அழிவடைந்துள்ளது.
அதில் அதிக பட்சமாக சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 8.875 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்