இடியுடன் கூடிய கன மழை - சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
சூறாவளி
இன்று இறுதியாக எடுக்கப்பட்ட ஆய்வின்படி மாண்டெஸ் சூறாவளி தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சூறாவளி கடந்த 03 மணித்தியாலங்களில் மணிக்கு 08km வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் (9.3N, 84.4E) மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளியின் மையப் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகமானது 60km/h-70km/h வரை வீசிக் கொண்டிருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் 09ஆம் திகதி நள்ளிரவு வேளையில் 65km/h - 75km/h வேகத்தில் வீசும் காற்றுடன் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை - காற்று
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதான நகரங்களுக்கான வானிலை
அனுராதபுரம் - அவ்வப்போது மழை பெய்யும்
மட்டக்களப்பு - சிறிதளவில் மழை பெய்யும்
கொழும்பு - சிறிதளவில் மழை பெய்யும்
காலி - சிறிதளவில் மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
கண்டி - பிரதானமாக சீரான வானிலை
நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை
இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை
திருகோணமலை - அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
மன்னார் - அவ்வப்போது மழை பெய்யும்