கொழும்பில் வாழும் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒத்திகைகளை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து காவல்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளன.
போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
இந்த விழாவுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும் முன்னோடி ஒத்திகைப் பயிற்சிகள் கடந்த 30ஆம் திகதி ஆரம்பமானதுடன், இன்றைய தினமும் (பெப்ரவரி 02) அந்த ஒத்திகைகள் நடைபெறவுள்ளன.

கடந்த சில நாட்களாக பல்வேறு ஒத்திகைகள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (01) போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் பங்கேற்ற ஒத்திகைகள் நடத்தப்பட்டன.
காவல்துறையினர் விடுத்துள்ள அறிவித்தலின்படி, பின்வரும் வீதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் நோக்கிய சுதந்திர மாவத்தை (Torrington Avenue). ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து அத்திவார நிறுவனம் (Foundation Institute) நோக்கிய பகுதி.
பௌத்தாலோக மாவத்தை டொரிங்டன் சந்தியிலிருந்து பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தைக்கு நுழையும் பகுதி.
பௌத்தாலோக மாவத்தை ஆர்.எப்.பி (R.F.P) சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் (Maitland Place) பகுதி.
விஜேராம மாவத்தை வித்தியா மாவத்தை சந்தியிலிருந்து வித்தியா மாவத்தைக்கு நுழையும் பகுதி.
வாகன சாரதிகள்
மெய்ட்லண்ட் கிரசண்ட் ஆர்.பி. சேனாநாயக்க மாவத்தை சந்தியிலிருந்து சுதந்திர சுற்றுவட்டம் நோக்கிய பகுதி.

சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து மெய்ட்லண்ட் கிரசண்ட் நோக்கிய பகுதி.
ஹோர்டன் பிளேஸ் மெய்ட்லண்ட் கிரசண்ட் சந்தியிலிருந்து சுதந்திர சுற்றுவட்டம் நோக்கிய பகுதி.
இந்தக் காலப்பகுதியில் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |