திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட தேரர்கள் உள்ளிட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலை
எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில், புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து காவல்துறையினருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (2) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக கைதானவர்களை விடுவிப்பது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பானது நாலைய தினம் வெளியிடப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த நீதிமன்ற தீர்ப்பின் நிமிர்த்தம் பிணை வழங்கப்படும் பட்சத்தில் அதனை சமர்ப்பித்து பிணைவழங்க கோர முடியும் என சட்டத்தரணி மஹேஷ் கொடுவல்ல செய்தியாளர்களுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் - Nickey thomson
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |