இலங்கையில் டெங்கு நோய் தீவிரம் : நான்கு வயது சிறுமி உயிரிழப்பு!
டெங்கு காய்ச்சல் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
திக்வெல்ல - நில்வெல்ல, அதுலஸ்ஸவத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று (20) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் காய்ச்சல் காரணமாக முதலில் திக்வெல்ல பிரதேச வைத்தியசாலையில் இந்தச் சிறுமிஅனுமதிக்கப்பட்டிருந்தார்.
காலி தேசிய வைத்தியசாலை
இந்தநிலையில் நோய் நிலைமை தீவிரமடைந்தமையினால் மாத்தறை பொது வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அன்றைய தினமே காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கும் மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

காலி தேசிய வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் போது, டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலினால் காரணமாகவே இம்மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்