மத்தியகிழக்கில் தீவிரமடையும் பதற்றம்! இலங்கை எல்லையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய கப்பல்கள்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டிருப்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (08) இடம்பெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பிராந்திய கடல் எல்லையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் அந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
வர்த்தக மற்றும் சரக்குக் கப்பல்கள்
அந்தக் குழுவில் ஈரானியக் கப்பல்களுடன் பிற நாட்டு கப்பல்களும் அடங்கியுள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை வர்த்தக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்தக் கப்பல்களும் இலங்கையிடம் இருந்து எந்த வசதிகளையோ உதவியையோ கோரவில்லை என்றும், இலங்கை அவற்றுக்கு எந்த வசதிகளையும் வழங்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், கடற்படை தற்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சர் உறுதியளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |