நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாமல்
சுங்கத்தால் மோசடி முறையில் விடுவித்த கொள்கலன்களில் இருந்து அரசாங்கமம் பாரிய வருமானத்தை ஈட்டிருக்கும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பிரேரணை விவாதத்தின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேறும் கருத்து வெளியிட்ட அவர்,
அபிவிருத்தி எட்டாத பாதை
“இன்றும் கூட தேர்தலுக்கு முன்னர் கூறிய எந்த விடயத்தையும் தற்போதைய அரசாங்கம் சரியாக செயற்படுத்தவில்லை.

குறிப்பாக அபிவிருத்தி எட்டாத பாதையில் சரிவராத நடைமுறையுடன் இந்த அரசாங்கம் பயணித்துக்கொண்டிருக்கிறது.
கிராமப்புரங்களில் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். விவசாயிகள் பாரியளலவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு எல்நினோவிற்கு முன்னர் நீர் பாவனை குறித்து சரியாக இந்த அரசாங்கம் சிந்திக்கவில்லை. அதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு சரியான மானியத்தை இந்த அரசாங்கம் வழங்கவில்லை. நெல்லானது குறைந்த விலைக்கே இன்றும் கொள்வனவு செய்யப்படுகிறது.
மேலும், டிட்வாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து என்னனமோ பேசிய ஜனாதிபதியை நினைவிருக்கின்றதா. அதந்கும் கூட சரியான தீர்வுகளை இந்த அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening