ராஜபக்சாக்களுக்கு தொடரும் நெருக்கடி : சமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இன்று (08) காலை அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எயார்பஸ் கொள்முதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எயார்பஸ் விமானக் கொள்வனவு
இதேவேளை எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை (04) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23