திருமண விழாவில் மகிந்த ராஜபக்ச: உடல்நலம் தொடர்பில் நெருங்கிய வட்டாரங்கள் தகவல்
திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குடும்பத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது மிகவும் நலமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் முதலில், ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, எம்.ஐ.சி.யூ பிரிவிலும், பின்னர் ஐ.சி.யூ பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு தற்போது சாதாரண வார்ட்டிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
திருமண விழா
இந்நிலையில், வீடு திரும்பி நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்னிற்கு சென்றிருந்ததாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |