அனைத்து குண்டுகளின் தந்தை தயார்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
உலகையே உலுக்கும் 'அனைத்து குண்டுகளின் தந்தை' ஆயுதம் தயார் என அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரானின் எரிசக்தி கட்டமைப்பு மற்றும் நிலத்தடி அணுசக்தி தளங்களை குறிவைக்க, அமெரிக்காவின் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத வெடிகுண்டான ஜிபியு-43/பி எம்.ஓ.ஏ.பி. எனப்படும் 'அனைத்து வெடிகுண்டுகளின் தாய்' வெடிகுண்டை பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், “இது அணு ஆயுதம் அல்ல; அணு குண்டைப் போன்ற அழிவுத்திறன் கொண்ட ஒரு மிகப்பெரிய சாதாரண குண்டுதான். நாங்கள் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டோம்" என்றார்.
அதி சக்தி வாய்ந்த ஆயுதம்
அதாவது, அடுத்த மாதம் அங்கு நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது அதிபயங்கர தாக்குதல் நடத்துவோம் என ட்ரம்ப் சூசகமாக அறிவித்திருந்தார்.

ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் உலக வல்லரசுகளுக்கே சவால் விடும் வகையில், அதைவிட பல மடங்கு அழிவுத்திறன் கொண்ட 'அனைத்து குண்டுகளின் தந்தை' என்ற புதிய பிரம்மாண்ட ராணுவ ஆயுதத்தை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
ஈரானின் இந்த புதிய ஆயுதம் 10தொன் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டாகும். இது ரஷியாவின் மிகப்பெரிய போர் விமானமான இலூயுஷின் (ஐஎல்-76) ரக கனரக போக்குவரத்து விமானங்களில் இருந்து வீசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 9.8தொன் எடையுள்ள ஜிபியு-43/பி வெடிகுண்டு 9 நகரத் தொகுதிகளை அழிக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |