வலி. வடக்கு பகுதிகளில் காணி விடுவிப்புக்கோரி போராட்டம்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்று (23) 27ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
கடுமையான மழை
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும்போதும் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய தினம் 27ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடுமையான மழை பொழிந்த போதிலும் மழைக்கு மத்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |