செம்மணி உண்மைகளை மூடி மறைக்கும் ராஜ் சோமதேவாவின் அறிக்கை: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
செம்மணி விவகாரம் மற்றும் ராஜ் சோமதேவாவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற உரையில் தனது கருத்தை பின்வருமாறு பகிரங்கப்படுத்தியிருந்தார்.
“தமிழ் தேசியத்தை கடுமையாக விமர்சித்தவர்களும் செம்மணி தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
1999ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட உடல்களில் 96 சதவீதமானவை உடைகள் இன்றி இருப்பதை ராஜ் சோமதேவாவின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் 17ஆம் பக்கத்தில் அடிகோடிடப்பட்டு "ஒருவேளை தொற்றுநோயாலும் இறந்திருக்கலாம் என்றும் சாதாரண முறையில் மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளமை ஏற்கமுடியாததொன்று.
இதன் காரணமாகவே செம்மணி தொடர்பாக நடக்கின்ற விசாரணைகள் இந்த நாட்டுக்குள்ளே செய்ய முடியாது. ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு நீங்கள் இணங்க வேண்டும்” என வலியுறுத்துகிறோம். என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |