இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று வெற்றி - குமார் சங்கக்காரவின் எக்ஸ் பதிவு
சர்வதேச கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திப் பிடித்த இலங்கை அணி, 2 விக்கெட்டுகளால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றிகரமான இலக்குத் துரத்தலைப் பதிவு செய்து இலங்கை அணி சாதனை படைத்துள்ளது
பவன், தசுன், ஜனித் மற்றும் அவிஷ்க ஆகியோரின் சிறப்பான ஆட்டத்திறனால் இலங்கை கிரிக்கெட் அணி பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெரிதும் கொண்டாடுவதற்கான உரிமை இலங்கை அணிக்கு உண்டு என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அணியை மிக உயர்ந்த நிலை
பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதேவேளையில், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக அணியின் கவனம் தொடர்ந்து அதில் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலக்காகக் கொண்டு, அணியை வலுப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, அணியை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்காக இந்த வெற்றியிலிருந்து முறையான திட்டவட்டமான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்குவது அவசியமானது என்றும் குமார் சங்கக்கார தனது 'X' பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |