நாமல் ராஜபக்ச உள்ளிட்ட இருவருக்கு மறுக்கப்பட்ட பிணை: மீண்டும் விளக்கமறியல் உத்தரவு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் பிணை கோரிக்கைகளை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (23.10.2026) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரான நாமல் ராஜபபக்ச நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |