மட்டக்களப்பில் அரச சீருடையுடன் மது அருந்திய வனப்பரிபாலன சபை அதிகாரிகள்
அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கேப் வாகனத்தை இரு அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் திணைக்கள சீருடையில், அரச வாகனத்தில் மாவட்ட புதிய செயலகத்துக்குச் செல்லும் வழியில் பாலமீன்மடு பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தில் வைத்து மதுபானம் அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் மதுபோதையில் அரச வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும், இது வீதியில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஊழல் மோசடி
எனவே, அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், அதனை மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குறித்த இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23