10000 வங்கிக் கணக்கு இலக்கங்களை பயன்படுத்தி நிதி மோசடி! ஆரம்பமாகிறது CID விசாரணை

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Pavi Sep 08, 2026 04:52 AM GMT
Report

பல்வேறு நபர்களின் 10,000 வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பயன்படுத்தி, இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி மோசடிக் குழுக்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாடகைக்கு பெறப்பட்ட அல்லது பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட பிறருக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் ஊடாக பரிமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள், இலாபம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைத்துக்கொண்டு அதற்கான கொடுப்பனவுகள் மற்றும் தரகு பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்கு இலக்கங்களைப் பெற்றுக்கொள்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை: மனைவியைக் கைது செய்த CID

ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை: மனைவியைக் கைது செய்த CID

இரகசிய வங்கித் தகவல்கள்

இதன் பின்னர், குறித்த கணக்குகளுக்கு ஒரு தொகைப் பணத்தை வரவு வைத்து கணக்கு உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் குழுக்கள், அதன் பின்னர் அவர்களின் PIN இலக்கம் உள்ளிட்ட இரகசிய வங்கித் தகவல்களை தந்திரமாகப் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

10000 வங்கிக் கணக்கு இலக்கங்களை பயன்படுத்தி நிதி மோசடி! ஆரம்பமாகிறது CID விசாரணை | Never Share Ur Bank Account Details With Outsiders

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் வங்கிக் கணக்குகள், கணக்கு உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் பாரிய நிதிக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும், தங்களது வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைத்து மோசடிகளுக்கு உதவி செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பலர் சட்டத்தின் முன் சிக்கியுள்ளள்ளனர். 

வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்துகொள்ளுமாறு பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை வெளியிட்டு, இந்த மோசடிகளுக்காக நபர்களை இணைத்துக்கொள்வதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை

குறித்த மோசடிக் குழுக்கள், தாங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் வர்த்தகங்களுடன் தொடர்பு கொண்டு செயற்படுவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை கணக்கு உரிமையாளர்களுக்கு வழங்குவதாகவும் கூறி அவர்களை ஏமாற்றுகின்றனர்.

 10000 வங்கிக் கணக்கு இலக்கங்களை பயன்படுத்தி நிதி மோசடி! ஆரம்பமாகிறது CID விசாரணை | Never Share Ur Bank Account Details With Outsiders

பின்னர், குறித்த வங்கிக் கணக்கு விபரங்கள் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் ஊடாக வெளிநாடுகளில் உள்ள மோசடிக் குழுக்களின் கைகளுக்குச் செல்வதாகவும், அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு நிதிக் குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும்  குற்றப்புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது. 

இவ்வாறான நடவடிக்கைகளில் உள்நாட்டு வங்கிக் கணக்கு உரிமையாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசடிகளுக்கு உதவி செய்தவர்களாகக் கருதப்பட்டு, சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, எந்தவொரு காரணத்திற்காகவும் தமக்குச் சொந்தமான வங்கிக் கணக்கை வெளிநபர்கள் அல்லது வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வங்கிக் கணக்குகளை பிறரிடம் ஒப்படைப்பதன் மூலம் இணையவழி பண மோசடிகளுக்கு உதவி செய்த குற்றத்திற்காக, எவ்வித தொடர்பும் இல்லாத நபர்களும் சட்டத்தின் முன் தண்டனை பெற நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இன்று இலங்கை வரும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023