ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை: மனைவியைக் கைது செய்த CID
கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய - கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
கடந்த 2018.09.09 அன்று இந்தச் குற்றம் இடம்பெற்றுள்ளதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமைக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23