யாழ்ப்பாணம் உட்பட மூன்று மாவட்டங்களுக்கு வருகிறது மெட்ரோ பேருந்து சேவை
Jaffna
Bimal Rathnayake
Srilanka Bus
By Jaso
மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உயரப்போகும் பேருந்துகளின் எண்ணிக்கை
இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி