லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் தொடர்பில் புதிதாக வெளியாகிய தகவல்
லிட்ரோ எரிவாயு நிறுவனம், அடுத்த மூன்று நாட்களுக்குள் 3 இலட்சத்து 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த CORINTHIAN கப்பல் நேற்று (22) இலங்கையை வந்தடைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை இறக்கும் பணிகள் நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் 3.5 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எரிவாயுக் கையிருப்பு
இந்த எரிவாயுக் கையிருப்பு கிடைத்துள்ளதால், நாடளாவிய ரீதியில் விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், நுகர்வோர் வழமைபோன்று எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தேவையற்ற வகையில் எரிவாயு சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோரிடம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |