கோர விபத்தில் சிக்கிய கதிர்காம விகாராதிபதி பயணித்த வாகனம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Pavi
அம்பாந்தோட்டையின் ருஹுணு மாகம் பத்துவவின் பிரதம சங்கநாயக்கரும், கதிர்காமம் கிரிவெஹெர ராஜமகா விகாரையின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று (07.09.2026) இரவு 9.00 மணியளவில் மத்தளை மத்தளை பகதியில் இடம்பெற்றுள்ளது.
வீதியில் நின்றுகொண்டிருந்த எருமை மாட்டுடன் வாகனம் மோதியதையடுத்து, வாகனம் கவிழ்ந்து வீதியை விட்டு விலகிச் சென்றதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ராஜகீய பண்டிதர் கொபவக தம்மிந்த தேரர்
எனினும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு காற்றுப் பைகள் (Airbags) செயற்பட்டதன் காரணமாக விகாராதிபதி தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி