தமிழர் பகுதியில் பாரிய முதலீட்டுத் திட்டம் - களமிறங்கும் தாய்லாந்து நிறுவனம்
வவுனியாவில் 200 ஏக்கர் காணியில் 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் சீனி உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த பாரிய திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சீனி கைத்தொழிலை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
பூர்த்தியாகும் சீனித் தேவை
தாய்லாந்தின் சுடேச் சுகர் (Sutech Sugar Industries Ltd) நிறுவனத்திற்கு வவுனியா மாவட்டத்தில் பரந்த நிலப்பரப்பை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த பாரிய திட்டத்தின் மூலம் 20% அல்லது 120,000 மெட்ரிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.
இதன்மூலம் இலங்கையின் சர்க்கரைத் தேவையின் கணிசமான பகுதியை நிவர்த்தி செய்யலாம் என சொல்லப்படுகிறது.
200 ஹெக்டேர் பரப்பளவில் குறுங்காடுகளை கொண்டுள்ள இந்த நிலம், பசுமை வயல் சர்க்கரை மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடித்தளமாக நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
