எரிபொருள் வரிசையில் நின்று உயிரிழந்த மக்கள் - ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Anura Kumara Dissanayaka Petrol diesel price
By Thulsi Sep 18, 2025 12:58 AM GMT
Report

2022 ஆம் ஆண்டு எரிபொருள் வரிசைகளிலும், எரிவாயு வரிசைகளிலும் மக்கள் இறந்தது போன்ற ஒரு நெருக்கடி மீண்டும் ஏற்பட நாங்கள் இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் ஆறு எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், "மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தற்போதைய அரசு அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி

ஊழியர்களுக்கு என்ன நடக்கும் 

எந்தவொரு தொழிற்சங்கமும் அரசு மேற்கொள்ளும் திட்டத்தைத் தடுத்தால், அதன் தொடர்பில் முடிவு எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். ஒரு நிறுவனம் பழமைவாத மரபுகளுடன் முன்னேற முடியாது.

எரிபொருள் வரிசையில் நின்று உயிரிழந்த மக்கள் - ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி | Fuel Price In Sri Lanka Today

அதேபோல், ஒரு நிறுவனம் மனித உழைப்பை மட்டும் கொண்டு முன்னேறாது. ஒரு நிறுவனம் முன்னேற வேண்டுமென்றால், தொழில்நுட்பமும் அறிவியலும் இணைக்கப்பட வேண்டும். தொழில்நுட்பம் அல்லது அறிவியலுக்கு பயப்படும் எந்த நிறுவனமும் வளர்ச்சியடையாது. தொழில்நுட்பத்துக்குப் பயப்படும் அல்லது புதிதாக ஏதாவது மேற்கொள்ள அஞ்சும் நாடு முன்னேறாது.

எனவே, நிறுவனங்களை இயந்திரமயமாக்கலுக்கு உட்படுத்த வேண்டும். நிறுவனங்கள் இயந்திரமயமாக்கப்பட்டாலும், நாம் இயந்திரத்தனமானவர்கள் அல்ல. நாம் நெகிழ்ச்சியான மக்கள்.

எனவே, நிறுவனங்கள் இயந்திரமயமாக்கப்படும்போது ஊழியர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டு அதற்கு தீர்வுகளை வழங்குவோம்.

ஓர் அரசு கவிழ்க்கப்படும் போது, ஆளும் கட்சி தொழிற்சங்க உறுப்பினர்கள் புதிதாக தெரிவாகும் அரசின் தொழிற்சங்கத்தில் சேர அழுத்தம் கொடுக்கப்படும் என்பது முன்பிருந்த நிலையாகும்.

இல்லையெனில், மற்ற தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிறுவனத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. எண்ணெய் நிறுவன ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதி புனர்நிர்மாண பணிகள்: அமைச்சரின் அறிவிப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதி புனர்நிர்மாண பணிகள்: அமைச்சரின் அறிவிப்பு

கொள்ளையடிக்க அரச ஊழியர்கள்

வரலாற்றில், வாக்குச் சாவடிகளைக் கொள்ளையடிக்கக் கூட அரச ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். கடந்த ஆண்டு, இதுபோன்ற ஓர் அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் மாற்றினோம். எந்த அரச ஊழியரும் இதனால் துன்புறுத்தப்படவில்லை.

நம் நாட்டில் உள்ள பொதுமக்கள் முன்பு போலவே அதே அழிவுகரமான முடிவை எதிர்பார்க்கின்றார்களா? மக்கள் இதுபோன்ற விடயங்களை எதிர்பார்த்திருந்தால், அவர்கள் எங்களுக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். அவர்கள் பழைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

எரிபொருள் வரிசையில் நின்று உயிரிழந்த மக்கள் - ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி | Fuel Price In Sri Lanka Today

அவர்கள் 159 நாடாளுமன்ற இடங்களை வழங்கியிருக்க மாட்டார்கள். ஆனால், சிலர் மாறத் தயாராக இல்லை. மாற்றத்துக்குத் தயாராகுமாறு நாங்கள் அவர்களை அழைக்கின்றோம்.

இல்லையெனில், நாங்கள் முடிவுகளை எடுக்கத் தயாராக இருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் தோண்டித் தோண்டி பார்த்துப் பார்த்து பணியாற்றுவதில்லை.

இந்த முற்போக்கான மாற்றத்தை குறுகிய அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டாம். பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனைய நிறுவனத்தின் நவீனமயமாக்கலுக்கு ஈரானியத் தலைவர் வந்து அடிக்கல் நாட்டினார்.

மின்சாரக் கட்டணம்

ஆனால், உரிய காலத்தில் அந்தப் பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக, மின்சாரக் கட்டணம் கூட மேலதிக சுமையாக மாறியுள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நாங்கள் நவீனமயமாக்கி அதன் திறனை அதிகரித்து வருகின்றோம்.

எரிபொருள் வரிசையில் நின்று உயிரிழந்த மக்கள் - ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி | Fuel Price In Sri Lanka Today

மேலும், எண்ணெய் ஆய்வுத் திட்டத்தைத் தொடங்க நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொண்டர் அடிப்படையில் முன்வந்துள்ளனர். தேர்தல் காலங்களில் எண்ணெய் கண்டுபிடிப்புகள் பற்றிய கதைகளை எங்கள் மக்கள் செவிமடுப்பார்கள்.

முதல் மசகு எண்ணெய் போத்தல் 1970 தேர்தலின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் நிபுணர்களை நம்பி அவர்களுக்குப் பொறுப்புகளை வழங்கியுள்ளோம். அரசு தேவையான வசதிகளை மட்டுமே வழங்குகின்றது. இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் 26 ஆயிரம் பேர் ஒரு நிர்வாக அதிகாரத்தால் நிர்வகிக்கப்படுகின்றார்கள்.

அவ்வாறு இருக்கும்போது, ஒரு பிரச்சினை எழும்போது, உறுதியாக அந்த விடயத்தைக் கண்டறிவது கடினம். நெருக்கடிக்கு உரிமையாளர் இல்லை. இந்த அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே மின்சார சபையைத் தனியார் மயமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அது வலுசக்தி இறையாண்மையைப் பாதிக்கும் என்பதை நாங்கள் கண்டோம். அந்தச் சட்டத்தை மாற்றியது ஒரு குற்றமா? மின்சார சபை ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்தல் அல்லது சுகயீன விடுமுறை எடுப்பது இதனால்தானா? அவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தெரிவு செய்யப் பாதைகள் உள்ளன.

பிராந்தியத்தில் அதிக மின்சார கட்டணங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று சிலர் கூறுகிறார்கள். எனவே, ஒரு அலகு மின்சாரத்தின் விலையைக் குறைக்க நாங்கள் செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த காலத்தில், புதுப்பிக்கத்தக்க வலுசக்தியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்தது. புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

சில நீர்வீழ்ச்சிகள் அரசியல்வாதிகளின் உதவியுடன் அனுமதிப் பத்திரம் பெற்று விற்கப்பட்டன. இந்த அனுமதிப் பத்திரங்களைப் பெற்ற சிலருக்கு மின்சாரம் பற்றி எந்த அறிவும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வடக்கில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வழங்கப்பட்டிருந்தது, 8 டொலர் சதங்களுக்கு ஆகும். அதே நிலத்தையும், அதே காற்றையும் பயன்படுத்தி ஒரு அலகு மின்சாரத்தை 4 டொலர் சதங்களுக்கு உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு வழங்கினோம்.

இலாபத்தை மக்களுக்கு நேரடியாக

அதாவது ஒரு மின் அலகு உற்பத்திச் செலவை 50 சதவீதம் குறைக்க முடிந்தது. சியம்பலாண்டுவாவில் 100 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வளவு பாரிய திட்டம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வர்த்தகர்கள் யாரையும் எங்களுக்குத் தெரியாது. அவர்கள் எங்கள் நண்பர்களும் அல்ல. நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நாங்கள் செயற்படுத்த விரும்புகின்றோம்.

எரிபொருள் வரிசையில் நின்று உயிரிழந்த மக்கள் - ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி | Fuel Price In Sri Lanka Today

கெரவலப்பிட்டி ஒரு டீசல் மின் உற்பத்தி நிலையமாகத்தான் தொடங்கப்பட்டது. ஆனால் அது மின் துறை வல்லுநர்கள் அதை எல் என்ஜி மின் உற்பத்தி நிலையமாக மாற்ற பரிந்துரைத்தனர். அவ்வாறு செய்தால், ஒரு அலகு மின்சாரத்தை 50 சதவீதம் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியும்.

ஆனால் 2015 - 2019 அரசின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே கெரவலப்பிட்டியை எந்த நிறுவனத்துக்கு வழங்குவது என்பதைத் தெரிவு செய்ய முடியாததால் மோதல் எழுந்தது. இதன் விளைவாக, கெரவலப்பிட்டியை இன்று வரை எல் என் ஜி.மின் உற்பத்தி நிலையமாக மாற்ற முடியவில்லை.

எனவே, மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கத் முடியாததால் நுகர்வோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எதிர்காலத்தில், திருகோணமலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான 24 எரிபொருள் தாங்கிகளை நவீனமயமாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டங்கள் உள்ளன.

அது குறித்த ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் தொடங்கி, நிறைவு செய்ய நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கடந்த 8 மாதங்களில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 18.2 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. இலங்கையில் நுகர்வோருக்கு எரிபொருளை விநியோகிப்பது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மட்டுமல்ல.

எனவே, அந்த இலாபத்தை மக்களுக்கு நேரடியாக வழங்க முடியாது. எனவே, கல்வி மற்றும் சுகாதாரம் மூலம் அந்த இலாபத்தை மறைமுகமாக மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு 33 அரச நிறுவனங்களை மூட முடிவு செய்தது. அந்த நிறுவனங்களால் மக்களுக்கு எந்த சேவையும் வழங்கப்படுவதில்லை.

சம்பள உயர்வு

அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்கி அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் சில நிறுவனங்கள் உள்ளன. இந்த நாட்டுக்கு இதுபோன்ற நிறுவனங்கள் தேவையா? அரச சேவைக்காக 2027 ஆம் ஆண்டு 33 ஆயிரம் கோடி ரூபா சம்பள உயர்வுக்காக ஒதுக்கப்படும்.

எரிபொருள் வரிசையில் நின்று உயிரிழந்த மக்கள் - ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதி | Fuel Price In Sri Lanka Today

ஆனால், இதுபோன்ற பிரதிபலன்கள் மக்களுக்கு கிடைக்கின்றதா? இதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். அரச நிறுவனங்களில் விருந்தினர் விடுதிகள் உள்ளன. அவற்றை வணிகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து வருமானம் ஈட்டும் வழியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

சில அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் 31 ஆண்டுகளாக அரச வீடுகளில் வசித்து வந்தனர். அவற்றை நாம் மாற்றுகிறோம். நாட்டை நாகரிகமானதாக மாற்ற நாம் செயற்பட்டு வருகின்றோம். ஆட்சியாளர்கள் தெய்வீகப்படுத்தப்பட்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். நமக்கு எல்லாம் தெரியாது. அறிவு உள்ள அனைவரும் கதைக்க வேண்டும். நாம் அனைவருக்கும் இடமளித்துள்ளோம்.

நிபுணர்கள் பேசாமல் இருப்பது அநியாயம் ஆகும். எனவே, வல்லுநர்களும் துறைசார் நிபுணர்களும் கதைக்க வேண்டும். அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் நாம் முன்னோக்கிச் செல்வோம்.

நாங்கள் இரக்க உணர்வு கொண்டவர்கள். எனவே, 2022 ஆம் ஆண்டு எரிபொருள் வரிசைகளிலும் எரிவாயு வரிசைகளிலும் மக்கள் இறந்தது போன்ற ஒரு நெருக்கடி மீண்டும் ஏற்பட நாங்கள் இடமளிக்க மாட்டோம்  என்றார்.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைச்சருக்கு நேர்ந்த கதி! உச்சக்கட்ட ஆத்திரத்தில் தமிழ் எம்.பி

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைச்சருக்கு நேர்ந்த கதி! உச்சக்கட்ட ஆத்திரத்தில் தமிழ் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!           


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024