2ம் சங்கிலியனின் 404 ஆவது நினைவு தினம் - யாழில் அனுஷ்டிப்பு
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Beulah
யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் 404 ஆவது நினைவு தினம் இன்று(11) யாழில் நினைவுகூரப்பட்டுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாணம் முத்திரை சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை சிவசேனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மத தலைவர்கள்,அரச அதிகாரிகள் கல்விமான்கள்,வர்த்தகர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஊர்வலமாக சென்று
குறித்த குழுவினர், சங்கிலியன் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று சங்கிலியன் மன்னனினால் கட்டப்பட்ட யமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலிய மன்னனுக்காக அஞ்சலி செலுத்தினர்.








31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்