மாலியில் உயிரிழந்த சிறிலங்கா படை வீரர்!
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைப் பிரிவில் கடமையாற்றிய சிறிலங்கா படைவீரர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலி நாட்டில் கடமையாற்றி வந்த சிறிலங்கா படைவீரர் ஒருவரே திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறிலங்கா படைவீரர் 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதவச்சி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜீ.எல்.தேசப்பிரிய என்ற லான்ஸ் கோப்ரல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா படைப் பரிவில் சிறிலங்கா படைவீரர் உயிரிழப்பு
கடந்த 2022ம் ஆண்டில் அமைதி காக்கும் பணிகளுக்காக மாலி சென்ற குறித்த படைவீரர், நாடு திரும்பவிருந்த நிலையிலேயே, திடீர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த படைவீரரின் சடலம் நாளைய தினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.