வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 45 பேரை படகுகளுடன் பிடித்தது கடற்படை
சட்டவிரோத வெளிநாட்டு பயணம்
சட்டவிரோதமாக கடல்வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 45 பேரை கைது செய்துள்ளதாக சிறிலங்கா கடற்படை இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, தெற்கு கடற்பரப்பில் 26 பேருடன் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற பலநாள் மீன்பிடி இழுவைப்படகு மற்றும் மேற்குக் கடல் பகுதியில் பலநாள் மீன்பிடி இழுவைப்படகுடன் சென்ற 19 பேரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் கற்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா கடற்படை விடுத்துள்ள அறிவிப்பு
சட்டவிரோத ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு, ஆட்கடத்தல்காரர்களின் தந்திரங்களில் சிக்கி, சட்டத்தின் பார்வையில் பலியாவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கடற்படையினர் கேட்டுக்கொள்கின்றனர்.