சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட நிலை
SriLankan Airlines
Bandaranaike International Airport
Colombo
By Sumithiran
நெருக்கடி நிலைமை காரணமாக சிறி லங்கன் எயார்லைன்ஸ் தினசரி ஐந்து விமான சேவைகளை இரத்து செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதிய விமானங்கள் இல்லாததாலும், விமானிகளின் தொழில்முறை நடவடிக்கைகளாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானப் பயணிகள் சிரமம்
நாளொன்றுக்கு பல விமானங்களை தாமதப்படுத்துவதால், விமானப் பயணிகள் அடிக்கடி சிரமப்படுகின்றனர் என்று அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
