ஹமாஸின் சுரங்கத்தில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட பணயக்கைதிகள்
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
ஹமாஸ் அமைப்பினரால் காசா முனைக்கு கடத்தி செல்லப்பட்டவர்களில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களான இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை இஸ்ரேல் படையினர் சடலமாக மீட்டுள்ளனர்.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள்
காசாவில் ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 5 பேரின் உடல்களை பாதுகாப்புப்படையினர் இஸ்ரேலுக்கு கொண்டு சென்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் விடுதலை
காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி