ஹோமாகம தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து : ஐவர் பலி!
ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு கோட்டை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
80க்கும் மேற்பட்ட ஊழியர்கள்
இந்த தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ள நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தீ பரவத் தொடங்கிய தருணத்தில் அங்கிருந்த சிலரை ஒருவர் காப்பாற்றியதாகவும் மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக் கூடும் எனச் சந்தேகிப்பதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்