மத்திய வங்கியில் மாயமான பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Central Bank of Sri Lanka
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
மத்திய வங்கியில் 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல கோட்டை காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்றத்துக்கு குறித்த விவகாரம் தொடர்பில் கோட்டை காவல்துறையினர் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வாக்குமூலங்கள்
மத்திய வங்கியின் உயர்பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே அந்த திணைக்களத்தின் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாகவும் கோட்டை காவல்துறையினர் கூறினர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி