முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இடமாற்றமின்றி சேவையாற்றும் ஆசிரியர்கள் : வெளியான தகவல்

Ministry of Education Jaffna Mullaitivu Teachers
By Sathangani Jan 11, 2025 04:58 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்தில் மாறி மாறி 20 கிலோ மீற்றர் தூரத்திற்குள் தொடர்ச்சியாக சேவையாற்றி வரும் சுமார் 500க்கு மேற்பட்ட ஆசிரியர்களால் யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் இருந்து அங்கு சேவைக்குச்செல்லும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பல வருடங்களாக இடமாற்றம் இன்றி சென்றுவரும் ஆசிரியர்களால் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மட்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட திகதியில் 66 பாடசாலைகளில் 512 ஆசிரியர்கள் முல்லைத்தீவு வலயத்தின் 20 கிலோ மீற்றருக்கு உள்ளேயே மாறி மாறி சேவையில் உள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு சஜித் அணிக்கு அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு சஜித் அணிக்கு அழைப்பு

வடமாகாண கல்வி அமைச்சு

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்ட சேவைக்கு முல்லைத்தீவிற்கு செல்லும் ஆசிரியர்கள் சுமார் 150 கிலோ மீற்றர் வரை பிரயாணம் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் இடமாற்றமின்றி சேவையாற்றும் ஆசிரியர்கள் : வெளியான தகவல் | 500 Teachers Working Continuously Within 20 Km

உதாரணமாக விசுவமடு, புதுக்குடியிருப்பு வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி அப்பிரதேசங்களை சேர்ந்த ஆசிரியர்களை முல்லைத்தீவு நகருக்கு அப்பால் உள்ள பாடசாலைகளுக்கு பரம்பல் செய்வதன் மூலம் ஆசிரியர்களின் பிரயாண சுமையை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பிரதேச ஆசிரியர்களின் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு காரணமாக 20 கிலோ மீற்றருக்கு உட்பட்ட பாடசாலைகளில் பணிக்கு அனுமதித்து யாழில் இருந்து முல்லைத்தீவின் பிரதேச பெயர்கள் கூட அறியாத ஆசிரியர்கள் தூர பிரதேசங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு (Ministry of education) கவனம் செலுத்தி வெளிமாவட்டம் செல்லாது ஒரே மாவட்டத்தில் பல வருடங்களாக தங்கியிருப்போரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறீதரன் எம்.பிக்கு பயணத்தடை....! விமான நிலையத்தில் கடும் விசாரணை

சிறீதரன் எம்.பிக்கு பயணத்தடை....! விமான நிலையத்தில் கடும் விசாரணை

மேலதிக தகவல்கள் - பு.கஜிந்தன் 

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025